Sunday, November 1, 2009

காதலுக்கு வயசு இல்ல....

காதலுக்கு வயசு இல்லை.
எல் கேஜி கடைசி பெஞ்சில் ரெண்டு பசங்க...

பய 1: மச்சான் நான் ரொம்ப அப்சட்டா இருக்கேண்டா

பய 2: ஏண்டா மச்சான் என்ன ஆச்சு? வீட்டுல ஏதாச்சு பிரச்சனையா?

பய 1:இல்லடா, நேத்திக்கு toys வாங்க கடைக்கு போய் இருந்தேண்டா. அங்க ஒரு செம்ம பிகர் டா. சும்மா ஒன்றரை வயசு இருக்கும். அவங்க அம்மா மடியில படுத்து வாயில விரல வச்சுட்டு சிரிச்சா பாரு....ஐயோ ஐயோ....

பய2: அப்பரம் என்ன ஆச்சு?

பய 1: நானும் பலூன் எல்லாம் வச்சு செம்ம சீன் போட்டேன் மச்சி. ஆனா அவ கண்டுக்கவே மாட்டேனுட்டா! ரெண்டு நாளா நான் ஹார்லிக்ஸ் கூட குடிக்கல தெரியுமா... அவ என் அஞ்சலடா!

பய2: விடு மச்சி அவள தொட்டிலோட தூக்கிடுவோம்!

Labels: ,

Thursday, August 6, 2009

ஜோkS

முதலாளி: டிரைவர் வேலை கேட்குறீயே, வண்டி நல்லா ஓட்டுவீயா? லைசென்ஸ் வச்சிருக்கிறீயா?
பையன்: எங்க தாத்தா காலத்துலேருந்தே எல்லாரும் டிரைவர்தாங்க....இதோ....லைசென்ஸ் கூட எங்க தாத்தாவோடதுதான்....பார்த்துக்குங்க...!
-----------------------------------------------------------------------------------------

இப்பெல்லாம் பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் வாங்க வரது இல்லையே...மாட்டை வித்துட்டீங்களா?

மாடா? மாமியார்...ஊருக்கு போய்ட்டா!
------------------------------------------------------------------------------------------
என்ன! பொண்ணு பார்க்க வந்தவங்களுக்கு புளிசாதம் போடறீங்க?

தினசரி நாலு குரூப் பெண் பார்க்க வந்துட்டுப் போறாங்க. அன்றன்றைக்கு சமைச்சு கட்டுபடியாகலீங்க!
-------------------------------------------------------------------------------------------

ஏகப்பட்ட கடனை வச்சுகிட்டு எதுக்கு டீவி வாங்கினீங்க?

கடன் பிரச்சனைய டீவி பாத்து மறக்கலாம்னு தான்!
------------------------------------------------------------------------------------------

Thursday, June 18, 2009

கிண்டல்ஸ்-சினிமா

நபர் 1: தமிழ் படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் ஒரு வித்தியாசம் தான். அது என்னென்ன சொல்லு?

நபர் 2: ஒரு வித்தியாசம் தானா இருக்கு? தெரியலையே...

நபர் 1: ஆங்கில படத்துல படம் முழுதும் ஆங்கிலத்துல பேசுவாங்க. தமிழ் படத்துல எப்பவாச்சு தான் தமிழ்ல பேசுவாங்க.

(ஆஹா....நான் கௌதம் மேனனை கிண்டல் பண்ணலைங்கோ!)
-----------------------------------------------------------------------------------------------
பாட்டி: யப்பா பேராண்டி, இவர் யாரு தெரியுமா? உன்னோட சித்தப்பாவோட மச்சானோட மனைவியோட நாத்தனாரோட பெரியப்பா பையன்....

பேரன்: ஐயோ பாட்டி....அதுக்கு என்னைய என்ன பண்ண சொல்றீங்க?

பாட்டி: கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ...

பேரன்: யாருன்னு எனக்கு தெரியாது இவர..சும்மா கால்ல விழ நான் என்ன விஜய் டீவி best actor awardஆ வாங்கியிருக்கேன்.....போ பாட்டி!

(ஆஹா நான் சூர்யாவ கிண்டல் பண்ணலைங்கோ!)
--------------------------------------------------------------------------------------------

புதுமண தம்பதிகள் மேடையில் நிற்க....

மாப்பிள்ளை (மைக்கை எடுத்து): நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க.....ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பொண்ணு (அழுது கொண்டே): எனக்கு என்ன சொல்றதே தெரியலை....

மாப்பிள்ளை: ஏம்மா அழுவுற?

பொண்ணு: உன்னையும் நம்பி இத்தன பேரு வந்து இருக்காங்களே!!

(ஆஹா, நான் ஜெயம் ரவிய கிண்டல் பண்ணலேங்கோ!)
-------------------------------------------------------------------------------------------

தயாரிப்பாளர்: யோவ் டைரக்டர், படத்த எடுத்து இம்புட்டு நாளாச்சு. உடனே ரிலீஸ் பண்ண வேண்டியது தானே...

டைரக்டர்: சார், சும்மா இருங்க...படம் முடிஞ்சது நமக்கு மட்டும் தான் தெரியும். publicக்கு தெரியாது. இப்படி இழுத்து அடிக்குறதும் ஒருவித publicity தான் சார்!

தயாரிப்பாளர்: யோவ் பணம்ய்யா....

டைரக்டர்: கவலைய விடுங்க சார்......ரிலீஸ் ஆனவுடனே கலெக்சன் பண்ணிடலாம்.

(ஆஹா, நான் செல்வராகவனை கிண்டல் பண்ணலைங்கோ!)
-------------------------------------------------------------------------------------------

tv producer: இந்த நிகழ்ச்சிக்கு யார judgeஆ போடலாம்?

assistant:யாருக்கு வேலை வெட்டி இல்லையோ அவங்கள போடலாம் சார்!

(ஆஹா, நான் ஸ்ரீகாந்த கிண்டல் பண்ணலைங்கோ!)
------------------------------------------------------------------------------------------

Labels:

Wednesday, June 17, 2009

ஹாஹாஹா

நபர் 1: அட, என் மனைவி என் மேல் ரொம்ப கோபமா இருக்கிறாங்கிறத நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?

நபர் 2: அவங்க "சமைக்கிறாங்களே" அதை வச்சுதான்.
------------------------------------------------------------------------------------------

தொண்டர்: உங்களுக்கு ஒரு 'வோட்டு' கூட விழலையா! ஆச்சிரியமா இருக்கே....உங்க வோட்டு என்னாச்சு?

தலைவர்: ஹிஹி....பணம் வாங்கிட்டு நான் வேற ஒருத்தருக்கு வோட்டுப் போட்டுட்டேன்.
-----------------------------------------------------------------------------------------
ஆண்: ஒரு வாரமா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு டாக்டர்!....
டாக்டர்: அதுக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான் போகணும்.
ஆண்: ஒரு வாரத்துக்கு முன்னாடி அங்கேருந்து தானே டிஸ்சார்ஜ் ஆனேன்...!
---------------------------------------------------------------------------------------

தீவிரவாதி: ஹலோ கலெக்டர் ஆபிஸா...உங்க ஆபிஸ்ல வெடிகுண்டு வச்சிருகோம்

ஆபிஸர்: ஹாஹா...ஹாலோ இது தாலுகா ஆபீஸ்...!

தீவிரவாதி: அடச்சீ....ஏதோ ஒரு ஆபீஸ்...குண்டு வெடிக்கப் போகுது அவ்வளவுதான்!
----------------------------------------------------------------------------------------
நோயாளி: உடம்பு சரியில்ல டாக்டர்?
மருத்துவர்: எவ்வளவு நாளா?
நோயாளி: போன வாரம் வந்து தலைவலின்னு ஊசி போட்டு போனேனே....அன்று முதல்!
---------------------------------------------------------------------------------------
மருத்துவர்: என்னம்மா உடம்புக்கு?
பெண்: மூனு மாசமா குளிக்கல்ல....
மருத்துவர்: சோப்புக்கடை அடுத்த தெருவுல இருக்கு. நெக்ஸ்ட்.....!
-----------------------------------------------------------------------------------------

Labels:

Tuesday, June 9, 2009

பொண்ணு-மாப்பிள்ள ஜோக்ஸ்

பொண்ணு வீட்டுக்காரங்க: மாப்பிள்ள குணம் எப்படி?

தரகர்: தங்கமான ஆளுங்க. நாலுவருஷம்னு தீர்ப்பு வாங்கி உள்ள போனவரை அதிகாரிகளுக்கு புடிச்சபோய் ஏழு வருஷம் ஜெயிலுக்குள்ளே வச்சுகிட்டு வெளில விட மாட்டேங்குறாங்க....
----------------------------------------------------------------------------------------

பக்கத்துவீட்டுக்காரி: மாப்பிள்ள பேராசை பிடிச்சவராமே....?

பொண்ணு: ஆமா க்கா, கால் விரல்களுக்கும் மோதிரம் கேட்குறாரு?
---------------------------------------------------------------------------------------

மாப்பிள்ளையின் அப்பா: நம்ம பையனுக்கு தான் சைக்கிள்கூட சரியா ஓட்ட தெரியாதே? ஏன் பொண்ணு வீட்டுல ஸ்கூட்டர் வேணும்னு ரவுசு பண்றே?

மாப்பிள்ளையின் அம்மா: நீங்க சும்மா இருங்க. அத பத்தி உங்களுக்கு கவலை வேணாம். ஸ்கூட்டருக்கு ஒரு டிரைவர வச்சுகிட்டா போச்சு.
----------------------------------------------------------------------------------------
மாப்பிள்ளையின் சித்தப்பா: மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க?

பெண்ணின் சித்தி: மாப்பிள்ள பணக்காரனா வந்தா, மட்டன் பிரியாணி போடுவோம். பிச்சைக்காரனா வந்தா, பழைய சோறு போடுவோம்.
-----------------------------------------------------------------------------------

மனைவிக்கு ஒரு கவிதை:

கார்
பங்களா
நகை நட்டுகளோடு
மாமனார் தந்த இலவச இணைப்பு
-----------------------------------------------------------------------------------

Sunday, May 3, 2009

சிரிப்பு மச்சி சிரிப்பு

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

மகன் : அப்பா உன்னால இருட்டுல எழுத முடியுமா?
தந்தை : ஓ! முடியுமே
மகன் : அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?
ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

ஒரு மாணவன் இன்னொரு பையனை அடித்தான். அதற்கு ஆசிரியர் தவறு செய்த மாணவனை அடி அடி என்று அடித்தார்.

ஆசிரியர்: ஏண்டா உன்னையவிட சின்ன பையன அடிச்சே?
மாணவன்: நீங்களும் அதே தப்ப தானே சார் செய்யுறீங்க?

Labels:

Friday, March 27, 2009

மாணவன் ஸ் எம் ஸ்

ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்

நான்...இத சொல்லியே ஆகனும்....

question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think

இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு

பாடல்:

முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே

படம்:காரணம் ஆயிரம்

Labels:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது