Thursday, June 18, 2009

கிண்டல்ஸ்-சினிமா

நபர் 1: தமிழ் படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் ஒரு வித்தியாசம் தான். அது என்னென்ன சொல்லு?

நபர் 2: ஒரு வித்தியாசம் தானா இருக்கு? தெரியலையே...

நபர் 1: ஆங்கில படத்துல படம் முழுதும் ஆங்கிலத்துல பேசுவாங்க. தமிழ் படத்துல எப்பவாச்சு தான் தமிழ்ல பேசுவாங்க.

(ஆஹா....நான் கௌதம் மேனனை கிண்டல் பண்ணலைங்கோ!)
-----------------------------------------------------------------------------------------------
பாட்டி: யப்பா பேராண்டி, இவர் யாரு தெரியுமா? உன்னோட சித்தப்பாவோட மச்சானோட மனைவியோட நாத்தனாரோட பெரியப்பா பையன்....

பேரன்: ஐயோ பாட்டி....அதுக்கு என்னைய என்ன பண்ண சொல்றீங்க?

பாட்டி: கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ...

பேரன்: யாருன்னு எனக்கு தெரியாது இவர..சும்மா கால்ல விழ நான் என்ன விஜய் டீவி best actor awardஆ வாங்கியிருக்கேன்.....போ பாட்டி!

(ஆஹா நான் சூர்யாவ கிண்டல் பண்ணலைங்கோ!)
--------------------------------------------------------------------------------------------

புதுமண தம்பதிகள் மேடையில் நிற்க....

மாப்பிள்ளை (மைக்கை எடுத்து): நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க.....ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பொண்ணு (அழுது கொண்டே): எனக்கு என்ன சொல்றதே தெரியலை....

மாப்பிள்ளை: ஏம்மா அழுவுற?

பொண்ணு: உன்னையும் நம்பி இத்தன பேரு வந்து இருக்காங்களே!!

(ஆஹா, நான் ஜெயம் ரவிய கிண்டல் பண்ணலேங்கோ!)
-------------------------------------------------------------------------------------------

தயாரிப்பாளர்: யோவ் டைரக்டர், படத்த எடுத்து இம்புட்டு நாளாச்சு. உடனே ரிலீஸ் பண்ண வேண்டியது தானே...

டைரக்டர்: சார், சும்மா இருங்க...படம் முடிஞ்சது நமக்கு மட்டும் தான் தெரியும். publicக்கு தெரியாது. இப்படி இழுத்து அடிக்குறதும் ஒருவித publicity தான் சார்!

தயாரிப்பாளர்: யோவ் பணம்ய்யா....

டைரக்டர்: கவலைய விடுங்க சார்......ரிலீஸ் ஆனவுடனே கலெக்சன் பண்ணிடலாம்.

(ஆஹா, நான் செல்வராகவனை கிண்டல் பண்ணலைங்கோ!)
-------------------------------------------------------------------------------------------

tv producer: இந்த நிகழ்ச்சிக்கு யார judgeஆ போடலாம்?

assistant:யாருக்கு வேலை வெட்டி இல்லையோ அவங்கள போடலாம் சார்!

(ஆஹா, நான் ஸ்ரீகாந்த கிண்டல் பண்ணலைங்கோ!)
------------------------------------------------------------------------------------------

Labels:

6 Comments:

Anonymous Anonymous said...

kalakkal

June 18, 2009 2:47 PM  
Anonymous Legal Cell said...

//ஆஹா....நான் கௌதம் மேனனை கிண்டல் பண்ணலைங்கோ!

this is to inform you that you're being served a legal notice from photon factory for causing bad publicity to gautham menon.

though the cost of the damage caused by you is incalculable, we seek 250 crore and a proper apology from you.

in future think twice before writing about gautham menon.


legal cell
photon factory.

June 18, 2009 11:43 PM  
Blogger Karthik said...

post kalakkal. mela irukkura comment yaar pottathu? ;)

June 18, 2009 11:44 PM  
Blogger Thamizhmaangani said...

@கார்த்திக்

//mela irukkura comment yaar pottathu? ;)//

யப்பா இது உலக நடிப்புடா சாமி!:)

June 18, 2009 11:46 PM  
Blogger VISA said...

pinnal....:)

June 22, 2009 12:41 PM  
Blogger இராயர் அமிர்தலிங்கம் said...

romba nanringa sirikka vachathakku

June 29, 2009 3:35 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது